இமாலய சாதனையை நிகழ்த்தவிருக்கும் 'கண்ணான கண்ணே' பாடல்!

Update: 2021-10-13 01:30 GMT

விரைவில் 15 கோடி பார்வையாளர்கள் என்ற இமாலய சாதனையை விஸ்வாசம் படத்தன் 'கண்ணான கண்ணே' பாடல் நிகழ்த்தவுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், யோகிபாபு, தம்பி ராமைய்யா நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம். டி.இமான் இசையமைத்திருந்தார். மாபெரும் வெற்றியடைந்தது இப்படம்.


இப்படத்தில் தாமரை எழுதி, சித்ஸ்ரீராம் பாடிய ‛கண்ணான கண்ணே...' பாடல் சூப்பர் ஹிட்டானது. இப்போது வரை யூ-டியூப்பில் அதிகப்படியான ரசிகர்களால் கேட்டு ரசிக்கப்பட்டு வரும் இந்த பாடலின் லிரிக் வீடியோ இப்போது 15 கோடி பார்வையாளர்களை தொடவிருக்கிறது.


தற்பொழுது இந்த வீடியோ பாடல் 14.5 கோடி பார்வைகளை கடந்துள்ளது. விரைவில் இந்த வீடியோவும் 15 கோடி பார்வைகளை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News