சமந்தா எனக்குச் சகோதரி போன்றவர் - ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கர்!

Update: 2021-10-13 01:00 GMT

"சமந்தா எனக்குச் சகோதரி போன்றவர்" என சமந்தாவுடன் அவரது ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கருக்கும் உறவு என வலம்வரும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக கூறியுள்ளார்.


நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப்போகிறார், இந்த நிலையில் விவாகரத்துக்கான காரணம் இதுதான் என பல காரணங்கள் கிசுகிசு'க்களாக உலாவி வந்த நிலையில் அதில் முக்கிய காரணமாக சமந்தாவுக்கும் அவரது ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கருக்கும் இருந்த நெருக்கமான தொடர்பும் காரணம் என கூறப்பட்டு வந்தது.


இந்நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ளார் ப்ரீத்தம் ஜுகல்கர். அதில், "சமந்தா எனக்குச் சகோதரி போன்றவர். நான் அவரை ஜிஜி என்று அழைப்பது அனைவருக்குமே தெரியும். ஜிஜி என்றால் சகோதரி என்று பொருள். அப்படி இருக்கும்போது எங்களை எப்படி ஒருவர் தொடர்புபடுத்திப் பேசமுடியும்? எனக்கு நாக சைதன்யாவைப் பல ஆண்டுகளாகத் தெரியும்.

எனக்கும் சமந்தாவுக்குமான உறவுமுறை என்னவென்று அவருக்கும் தெரியும். சமந்தாவையும் என்னையும் பற்றி யாரும் அப்படி பேசவேண்டாம் என்று நாக சைதன்யா வாய்திறந்து பேசியிருக்கலாம். அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால் கூட அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்" என வேதனையுடன் கூறியுள்ளார்.

Similar News