ஒரு வழியாக துவங்கிய ஹிந்தி 'விக்ரம் வேதா'

Update: 2021-10-16 02:00 GMT

'விக்ரம் வேதா' ஹிந்தி பதிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.




 


புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் மற்றும் பலர் நடிக்க 2017ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விக்ரம் வேதா'. இப்படம் ஹிந்தியில் துவங்கப்படும் என அறிவித்து சில காரணங்களால் துவங்கப்படாமலே இருந்தது.




 


தற்பொழுது ஒரு வழியாக நேற்று அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். புஷ்கர் காயத்ரியே ஹிந்தியிலும் இயக்குகின்றனர். மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன், ஷ்ரத்தா கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

Similar News