ராம்சரணை இயக்கபோகும் 'கே.ஜி.எஃப்' இயக்குனர் பிரஷாந்த் நீல்!

Update: 2021-10-17 06:15 GMT

கே.ஜி.எஃப் இயக்குனராக பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்ட படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் ராம்சரண்.


கன்னடத்தில் வெளியாகி இந்திய அளவில் பலரின் பாராட்டுக்கள் பெற்ற படம் கே.ஜி.எஃப், யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இப்படம் பெரும் வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் இரண்டாம் பாகமும் தயாராகி வெளியீட்டுக்கு காத்திருக்கிறது.


இந்நிலையில் இதன் இயக்குனராக பிரஷாந்த் நீல் அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். தசரா பண்டிகை தினமான நேற்று முன்தினம் ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவியின் வீட்டுக்கு சென்ற இயக்குனர் பிரசாந்த் நீல் அங்கே சிரஞ்சீவியிடமும் ராம்சரணிடமும் கதை குறித்து விவாதித்துள்ளார். இந்தப்படத்தை டி.வி.வி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Similar News