நண்பர் ரஜினி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை தேறி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினியின் நண்பரும், நடிகருமான கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களும், பல அரசியல் தலைவர்களும் அவர் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர்.