அல்லு அர்ஜுன் நடித்த விளம்பரத்தால் எழுந்த சிக்கல் !

Update: 2021-11-10 11:00 GMT

ராபிடோ விளம்பரத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுன் மீது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.




 


சமீபத்தில் ராபிடோ என்கிற நிறுவனத்துக்காக அல்லு அர்ஜுன் நடித்த விளம்பர வீடியோ ஒன்று வெளியானது. அதில் தெலங்கானா அரசு போக்குவரத்து பேருந்துகள் கூட்ட நெரிசலாக இருப்பதாகவும் அவற்றில் பயணிப்பதற்கு பதிலாக ராபிடோ பயன்படுத்துவது சிறந்தது என்றும் அல்லு அர்ஜுன் வசனம் பேசியுள்ளார்.




 


இது அரசு போக்குவரத்து பேருந்துகளை அவமதிப்பு செய்யும் விதமாக இருப்பதாக தெலங்கானா அரசு போக்குவரத்து கழக நிர்வாக மேலாளர் சஜ்ஜனார் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அரசு சேவை நிறுவனங்களை அவமதிப்பு செய்யும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்கள் தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Similar News