ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகியது.
பாகுபலி'யை தொடர்ந்து ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட் உள்பட பலர் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தபடம் வரும் 2022 ஜனவரி 7-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது 'நாட்டுக்குத்து' என்ற இரண்டாவது சிங்கிள் பாடலின் பிரமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகி இணையத்தை தெறிக்கவிடுகிறது.