மீண்டும் இணையும் 'புலிமுருகன்' கூட்டணி !

Update: 2021-11-10 11:15 GMT

இயக்குனர் வைசாக் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் மோகன்லால்.




 


மலையாளத்தில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'புலிமுருகன்'. முதன்முறையாக நூறுகோடிக்கும் மேல் வசூலித்து மலையாள திரையுகில் ரெக்காரட் செய்தது. இயக்குனர் வைசாக் இயக்கி இருந்தார். கதாசிரியர் உதயகிருஷ்ணா இந்தப்படத்தின் கதையை எழுதியிருந்தார்.




 


இந்த நிலையில் 'மான்ஸ்டர்' என்கிற படத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார் மோகன்லால். மேலும் லக்கி சிங் என்கிற சர்தார்ஜி வேடத்தில் இந்தப்படத்தில் அவர் நடிக்கும் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

Similar News