சந்தானத்தின் சபாபதி படத்திற்கு எழுந்த புதிய சர்ச்சை

Update: 2021-11-15 10:30 GMT

போராளிகளை இழிவுபடுத்துவதாக சந்தானம் நடிக்கும் புதிய படமான சபாபதி படத்தின் மீது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.




 


நடிகர் சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'சபாபதி'. அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, 'குக் வித் கோமாளி' புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது.




 


அதில் இப்படத்தின் போஸ்டர் ஒன்றில் 'தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்' என எழுதப்பட்டுள்ள சுவரின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்று புகைப்படத்துடன் அந்த போஸ்டர் உள்ளதால், அதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தண்ணீருக்காக போராடும் போராளிகளை அவமதிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Similar News