சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் தமன் முதன் முறையாக இணைகிறார்.
இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் இசையமைப்பாளர் தமனுக்கு தமிழ், தெலுங்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயனின் 21வது படத்திற்கு தமன் தான் இசையமைக்க உள்ளார். இதனால் தமனுக்கு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ள வாழ்த்தில், "இனிய பிறந்நதாள் வாழ்த்துகள் தமன் ப்ரோ, 'புட்ட பொம்மா' போல மேலும் பல ஹிட்களைக் கொடுக்க வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இசையமைப்பாளர் தமன் கூறியதாவது, "பிரதர் சிவகார்த்திகேயன், உங்கள் அன்புக்கு நன்றி, பின்றோம், தட்றோம், தூக்கறோம், எஸ்கே 21" என பதிலளித்துள்ளார். இவர்கள் கூட்டணி கண்டிப்பாக வெற்றிபெரும் என ரசிகர்கள் இப்பொழுதே எதிர்பார்க்க துவங்கிவிட்டனர்.