குருப் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் - இயக்குனர் ஸ்ரீநாத் !

Update: 2021-11-20 11:30 GMT

குருப் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளியாகும் என படத்தின் ஸ்ரீநாத் ராஜேந்திரன் கூறியுள்ளார்.




 


கடந்த சில தினங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடிப்பில் குருப் என்கிற படம் பான் இந்தியா ரிலீஸாக வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் குருப், ரூ.50 கோடி வசூல் செய்த இப்படத்தின் வெற்றியை அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.


 



இதை தொடர்ந்து இந்தப்படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடலின் போது, இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலாக, "நிச்சயமாக.. அதற்கான வேலையை விரைவில் ஆரம்பிக்க போகிறேன்" என கூறியுள்ளார் ஸ்ரீநாத் ராஜேந்திரன்.

Similar News