கோவா திரைப்பட விழா - ஹேமமாலினிக்கு இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கிய எல்.முருகன் !

Update: 2021-11-21 08:45 GMT

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஹேமமாலினிக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய ஆளுமை விருது வழங்கப்பட்டது.




 


கோவாவில் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. திரைப்பட விழாவில் சர்வதேச பிரிவில் சுமார் 73 நாடுகளில் இருந்து 148 படங்கள் இடம்பெறுகின்றன. துவக்க விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர், மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.




 


ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது ஹேம மாலினிக்கு வழங்கப்பட்டது. விருதை மத்திய மந்திரி அனுராக் தாகூர், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் வழங்கினர்.

Tags:    

Similar News