ஐதராபாத்தில் கோலாகமாக நடைபெற்ற 'வலிமை' வில்லன் கார்த்திகேயா திருமணம் !

Update: 2021-11-21 08:30 GMT

இன்று காலை வலிமை படத்தின் வில்லன் கார்த்திகேயா'வின் திருமணம் கோலாகலமாக நடந்தது.




 


தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்திகேயா. சிறுத்தை சிவா இயக்கத்தில் வலிமை படத்தில் அஜித்'ன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரின் திருமணம் இன்று நடைபெற்றது.




 


கார்த்திகேயா அவருடைய நீண்ட நாள் தோழியான லோகிதா ரெட்டியை இன்று காலை ஐதராபாத்தில் திருமணம் செய்து கொண்டார். இன்று நடைபெற்ற திருமணத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

Similar News