வெப்தொடரில் நடிக்க தயாராகும் பிரியா பவானி சங்கர் !

Update: 2021-11-24 10:00 GMT

நாகசைதன்யா'விற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஒரு வெப் தொடரில் நடிக்கவிருக்கிறார்.




 


பத்து தர, குருதியாட்டம், ஹாஸ்டல் என பிரியா பவானி சங்கர் நடித்த அதிக படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன. தமிழில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நாயகி பிரியா பவானி சங்கர் தான். இவர் அடுத்தபடியாக ஒரு வெப் தொடரில் நடிக்கவிருக்கிறார்.




 


இயக்குனர் விக்ரம் குமார் ஒரு வெப் தொடர் இயக்குகிறார். அதில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க உள்ளார். இதில் நாயகனாக நாகசைதன்யா நடிக்க உள்ளார். அடுத்த 2022'ம் ஆண்டு வெப் தொடரின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

Similar News