சித் ஸ்ரீராம் குரலில் விரைவில் வலிமை இரண்டாவது பாடல் !

Update: 2021-11-28 08:30 GMT

வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் வாரத்தில் வெளியாகும் என்ன தகவல் பரவி வருகிறது.




 


இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேய மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'நாங்க வேற மாரி' பாடல் ஆகஸ்ட் மாதம் யூ டியூபில் வெளியிடப்பட்டது. 35 மில்லியன் பார்வைகளைக் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிளுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


 



இந்நிலையில் வரும் வியாழனன்று படத்தின் இரண்டாவது சிங்கள் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. தாமரை எழுத, சித் ஸ்ரீராம் அந்தப் பாடலைப் பாடியிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

Similar News