கப்பலில் ப்ரமோஷன் நிகழ்ச்சி - மரைக்காயர் படக்குழுவின் பிரம்மாண்டம் !

Update: 2021-11-28 09:00 GMT

மரைக்காயர் மட ப்ரோமோஷன் நிகழ்ச்சியை கப்பலில் வைத்து படக்குழு ஆச்சர்யப்படுத்தியுள்ளது.




 


இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மிகப்பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகியுள்ள படம், 'மரைக்கார்' அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படம் வரும் டிச-2'ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சிகளில் தற்பொழுது இதன் படக்குழு இயங்கி வருகிறது.




 


இந்நிலையில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை தற்போது கப்பலில் நடத்தி பிரமிக்க வைத்துள்ளார்கள். படக்குழுவினருடன் ரசிகர்கள் சிலரும் மற்றும் கடற்படை அதிகாரிகளும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர், இதுகுறித்த வீடியோ ஒன்றை மோகன்லால் வெளியிட்டுள்ளார்.

Similar News