நடிகர் மகேஷ் பாபு'வுடன் ஜாலியான ஷோ ஒன்றை ஓ.டி.டி தளத்திற்காக பண்ணவிருக்கிறார் நடிகர் பாலகிருஷ்ணா.
சமீபத்தில் பாலகிருஷ்ணா நடித்த 'அகண்டா' திரைப்படம் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஓ.டி.டி தளம் ஒன்றிற்காக 'அன்ஸ்டாப்பபில் வித் என்பிகே' என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார் பாலகிருஷ்ணா. இதில் பல பிரபலங்கள் பாலகிருஷ்ணாவுடன் கலகல உரையாடல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் வரும் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக நடிகர் மகேஷ்பாபு'வுடன் கலகல உரையாடலை நடத்தவிருக்கிறார் பாலகிருஷ்ணா. இந்த நிகழ்ச்சி குறித்து மகேஷ்பாபு கூறுகையில், "இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இந்த மாலை பொழுதை ரொம்பவே ரசித்து அனுபவித்தேன்" என கூறியுள்ளார்.