இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் வெளியான 'மகாமுனி' படம் மேலும் ஒரு சர்வதேச விருதை வென்றுள்ளது.
இயக்குனர் சாந்த குமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்து 2019'ல் வெளியான படம் 'மகாமுனி', இதுவரை 9 சர்வதேச விருதுகளை வென்று இப்படம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. மேலும் ஒரு பெருமையாக 15ஆவது அயோத்யா திரைப்பட விழாவில் 'மகாமுனி' படத்தில் நாயகனாக நடித்துள்ள ஆர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
இதுகுறித்து நடிகர் ஆர்யா கூறியுள்ளதாவது, "அயோத்யா திரைப்பட விழாவின் 15ஆவது ஆண்டு விழாவில் மகாமுனியில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது மகிழ்ச்சி. இயக்குனர் சாந்தகுமார், இசையமைப்பாளர் தமன், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு எனது நன்றிகள்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்