அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ஆந்திராவில் செம்மர கடத்தல்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை மையமாக வைத்து உருவாகும் படம் 'புஷ்பா'. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் நடித்துள்ள இப்படம் இரண்டு பாகமாக பான் இந்தியா படமாக உருவாகிறது.
இதன் முதல் பாகம் தற்பொழுது தயாராகி வெளியாகவுள்ளது. சுமார் 3 மணி நேரம் படமாக 'புஷ்பா - தி ரைஸ்' என்ற பெயரில் இப்படம் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.