ஆர்.ஆர்.ஆர் படத்தின் ட்ரெய்லர் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இந்திய அளவில் முன்னணி இயக்குனரான ராஜமௌலியின் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ட்ரெய்லர் மிகவும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ட்ரெய்லர் அனைத்து மொழிகளிலும் ஒட்டு மொத்தமாக 65 மில்லியன் பார்வைகளை 48 மணி நேரத்தில் கடந்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை அதிகமாக ஹிந்தியில் தான் ரசிகர்கள் பார்த்துள்ளனர். படத்தின் எதிர்பார்ப்பை ட்ரெய்லர் அதிகமாக்கியுள்ளது.