'மறக்குமா நெஞ்சம்...' - வெளியானது சிம்பு'வின் "வெந்து தணிந்தது காடு" டீசர் !
சிம்பு'வின் 'வெந்து தணிந்தது காடு' டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சிம்பு, கயடு லோஹர், ராதிகா நடிப்பில் மிக வேகமாக உருவாகி வரும் படம் 'வெந்து தணிந்தது காடு'. அறிவிக்கப்பட்டு உடனே துவங்கப்பட்டு பரபரவென படப்பிடிப்பு முடிந்த சிம்பு படம் இதுவாகத்தான் இருக்கும்.
இந்தநிலையில் தற்போது 'வெந்து தணிந்தது காடு' படத்தின் முன்னோட்ட டீசரை படக்குழு வெளி யிட்டுள்ளது. அதில் 'மறக்குமா நெஞ்சம்' என ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ஒலிக்கும் ஒரு பாடல் வரியுடன் அதிரடியான ஆக்சன் காட்சிகளாக இடம் பெற்றுள்ளது. இந்த டீசரை சிம்புவின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.