சென்னையை புகழ்ந்து தள்ளிய ஆர்.ஆர்.ஆர் ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் !
இயக்குனர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் சென்னையை புழகந்து தள்ளியுள்ளனர்
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் ஆகியோர் நடிக்கும் பான் இந்தியா திரைப்படமான 'ஆர்.ஆர்.ஆர்' விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்தியாவின் முக்கியமான அனைத்து மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இப்படத்தின் ப்ரமோ நிகழ்ச்சிகளில் பங்குபெற இயக்குனர் ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை வந்திருந்தனர்.
அப்பொழுது பேசிய இயக்குனர் ராஜமௌலி கூறியதாவது, "சென்னை தான் எனக்கு சினிமா கற்றுத்தந்தது. படம் எடுக்கும் போதே, பெரிய படம் என்று சொல்ல முடியாது. ரசிகர்கள் தான் படத்தை பெரிய படம் என்று சொல்ல வேண்டும். ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என ஆசை தான்" என கூறினார்.
பின்னர் பேசிய ராம்சரண், "நான் பிறந்தது சென்னை; தமிழ் என் இரண்டாவது தாய்மொழி. தமிழில் பேசியது சிறந்த அனுபவமாக இருந்தது" என்றார். பின் தொடர்ந்த ஜூனியர் என்.டி.ஆர், "தென்னிந்திய சினிமா பிறந்ததே சென்னையில் தான். தமிழுக்கும், சினிமாவுக்குமான தொடர்பை மறுக்க முடியாது" என்றார். மேலும் இவர்கள் சரளமாக தமிழில் பேசினர் என்பதும் குறிப்பிடதக்கது.