'வாத்தி கம்மிங்' பாடலின் தெறிக்கவிடும் சாதனை !

Update: 2021-12-14 06:45 GMT

'வாத்தி கம்மிங்' பாடல் தென்னிந்திய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளது.




 


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்த படம் 'மாஸ்டர்' படத்தில் இடம் பெற்ற 'வாத்தி கம்மிங் ஒத்து' பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைத்த இப்பாடல் யூ ட்யூல்'பில் தொடர்ந்து ட்ரெண்டிங்'கில் இருந்து வந்தது.




 


இந்நிலையில் இப்பாடல் வெளியிடப்பட்டு 10 மாதங்களில் 300 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். அந்த வகையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் தென் இந்திய அளவில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் விஜய்'யின் ரசிகர்கள் ட்ரெண்டாக கொண்டாடி வருகின்றனர்.

Similar News