ரசிகரை இழிவுபடுத்திய வழக்கு - விஜய் சேதுபதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Update: 2021-12-15 09:30 GMT

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.




 


கடந்த நவம்பர் 2-ந்தேதி பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை ரசிகர் ஒருவர் தாக்கியதாக வீடியோ பரவியது, விசாரித்ததில் தனது சாதியை தவறாக குறிப்பிட்டதாகவும் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகாகாந்தி என்பவர் விளக்கமளித்துள்ளார்.




 


அதன் பிறகு மகா காந்தி என்பவர் தொடுத்த வழக்கில் விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன் தன்னை தாக்கியதாகவும் அதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி தரப்பு தன் மீது அவதூறு பரப்பியதாகவும் புகாரில் தெரிவித்தார். இந்த புகாரின் விசாரணையில் நீதிபதி வருகிற ஜனவரி 4-ம் தேதி விஜய் சேதுபதி, ஜான்சன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

Similar News