இயக்குனர் ராஜேஷுடன் கூட்டணி சேரும் ஜெயம்ரவி !

Update: 2021-12-17 12:15 GMT

ஜெயம்ரவியின் 30'வது படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்குகிறார்.



மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தை முடித்துள்ள ஜெயம்ரவி தற்பொழுது பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்தவுடன் அடுத்தபடியாக அவர் நடிக்கும் படம் 30'வது படமாகும். இப்படத்தை அவர் அடுத்த 2022'ல் துவங்க இருக்கிறார்.




 


ஜெயம்ரவியின் 30'வது படத்தை சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் இயக்கவிருக்கிறார். காமெடி கலந்த கதைக்களமாக இப்படம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Similar News