வசூல் மன்னனாக மாறிய ஸ்பைடர்மேன்

Update: 2021-12-20 11:00 GMT

ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம் திரைப்படம் இந்தியாவில் 100 கோடி வசூல் என்ற இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது.




 


கடந்த வியாழன் அன்று (16 டிசம்பர்) உலகம் முழுவதும் ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம் வெளியானது. இந்தியாவிலும் அதே நாள் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மலையாளம் என முக்கிய ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படத்திற்கு இந்தியாவில் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது. ரசிகர்கள் குடும்பத்துடன் அதிகளவில் திரையரங்கிற்கு சென்று பார்த்து வருகின்றனர்.




 


இந்நிலையில் 4 நாட்கள் முடிவில் 100 கோடி வசூலை ஸ்பைடர்மேன் திரைப்படம் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. அது மட்டுமின்றி குறுகிய நாட்களில் 100 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படங்களில் இதுவும் ஒன்று என்ற பெருமையை ஸ்பைடர்மேன் பெற்றுள்ளது.

Similar News