போட்டியின்றி 'அம்மா'வின் தலைவரான மோகன்லால்

Update: 2021-12-20 11:15 GMT

மலையாள நடிகர் சங்கம் 'அம்மா'வின் தலைவராக மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.




 


மலையாள திரையுலகின் நடிகர் சங்கம் 'அம்மா' என அழைக்கப்படும். இதற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு செய்யும் தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் தலைவராக மோகன்லாலும், செயலாளராக எடவலா பாபுவும், பொருளாளராக சித்திக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போடியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.




 


மேலும் இந்த நிர்வாகிகளின் கீழ் மலையாள நடிகர் சங்கம் 'அம்மா' 2022'ம் ஆண்டு முதல் 2025'ம் ஆண்டு என மூன்று ஆண்டுகள் செயல்படும்.

Similar News