மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான கார்த்தி மற்றும் ஜெயம் ரவி தங்களது டப்பிங் பணியை முடித்துள்ளனர்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார் ஆகியோர் நடித்து வரும் படம் 'பொன்னியின் செல்வன்', அமரர் கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் படத்தில் வந்திய தேவனாக வரும் கார்த்தியும், அருள்மொழி வர்மனாக வரும் ஜெயம் ரவியும் தங்களது டப்பிங் பணிகளை சிறப்பாக முடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் இப்படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.