'முத்துவின் பாவை' - கவுதம் அறிவித்த சிம்புவின் புது கதாநாயகி !

Update: 2021-12-31 10:00 GMT

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்புவுடன் இணையப்போகும் கதாநாயகி குறித்த அறிவிப்பை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார்.




 


இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'வெந்து தணிந்தது காடு', ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தின் இசை ஏ.ஆர்.ரஹ்மான். 'மாநாடு' படத்தின பெரிய வெற்றிக்கும் பிறகு வெளிவரும் சிம்பு படம் இது என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.




 


இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி யார் என்பதை முதன்முறையாக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் அறிவித்துள்ளார். குஜராத்தி நடிகை 'சித்தி இட்னானி' என்ற நடிகையை 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக கவுதம் வாசுதேவ் மேனன் அறிமுகப்படுத்தியுள்ளார். 'முத்துவின் பாவை' என பெயரிட்டு போஸ்டர் வெளியிட்டுள்ளார்.

Similar News