நிதி அகர்வால் நடித்த சர்ச்சை விளம்பரம் - குவியும் எதிர்ப்புகள்!

Update: 2022-01-05 10:30 GMT

மதுபான விளம்பரத்தில் நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு எதிர்ப்புகள் குவிகின்றது.




 


சிம்புவுடன் ஜோடியாக ஈஸ்வரன் படத்தில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். தற்பொழுது உதயநிதி ஸ்டாலினுடன் நடித்து வருகிறார். அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் சமூக வலைதளம், விளம்பர படங்கள் என பிசியாக வலம் வருபவர் நிதி அகர்வால்.




 


இந்நிலையில் மதுபாட விளம்பரம் ஒன்றில் நடித்ததாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அந்த விளம்பரத்தில் கோப்பை ஒன்றில் மது ஒன்றை ஊற்றி நுகர்ந்து பார்த்து, இது அருந்த சுவையான பானம் பருகவும் சிறந்தது என வசனம் பேசுவதாக அந்த விளம்பரம் வெளிவந்துள்ளது. இதனையடுத்து மதுபான விளம்பரத்தில் நடித்ததற்காக நிதி அகர்வால் மீது எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே காஜல் அகர்வால் இதுபோன்ற மதுபான விளம்பரத்தில் நடித்ததாக எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடதக்கது.

Similar News