தேதி குறிப்பிடாமல் துல்கர் சல்மானின் 'சல்யூட்' வெளியீடு தள்ளிவைப்பு

Update: 2022-01-11 11:45 GMT

தள்ளிப்போனது துல்கர் சல்மான் நடித்த 'சல்யூட்' படத்தின் வெளியீடு.




 


கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் குரூப். இப்படத்தின் வெற்றியை அடுத்து துல்கர் சல்மான் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் 'சல்யூட்' என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக முதன்முறையாக நடித்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் ஏற்கனவே மும்பை போலீஸ் என்ற போலீஸ் கதையை இயக்கி வெற்றியடைந்ததால் இப்படம் தென்னிந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.




 


இந்நிலையில் வரும் பொங்கலுக்கு வெளியாக வேண்டிய 'சல்யூட்' கொரோனோ பரவல் ஊரடங்கால் தள்ளிப்போகியுள்ளது. மேலும் மீண்டும் வெளியீட்டு தேதி எப்பொழுது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News