'கைதி' ஹிந்தி பதிப்பை பூஜையுடன் துவங்கிய அஜய் தேவ்கன்

Update: 2022-01-14 16:15 GMT

தமிழில் வெளிவந்த 'கைதி' படத்தின் ஹிந்தி பதிப்பில் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளார், இதன் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது.




 


கடந்த 2019'ம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் 'கைதி', பெரும் வெற்றியை பெற்ற இப்படத்தின் ஹிந்தி உரிமைக்கும் பல போட்டிகள் நடந்தன. இந்நிலையில் இப்படத்தின் உரிமையை ஹிந்தியில் அஜய் தேவ்கன் கைப்பற்றியுள்ளார்.




 


இந்நிலையில் கைதி படத்தை ஹிந்தியில் 'போலா' என்ற பெயரில் இயக்குனர் தர்மேந்திரா ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. தமிழில் கைதி வெற்றியடைந்தது போலவே ஹிந்தியில் இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என படக்குழுவினர் மிகவும் முழுமையாக நம்புகின்றனர்.

Similar News