பிரபாஸுக்கு கவசம் எட்டு படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸின் சினிமா உலகம் ஏறுமுகத்தில் உள்ளது. அவரது படங்கள் குறைந்தபட்சம் மூன்று மொழிகளில் வெற்றியடைந்து வருகிறது. பாகுபலிக்கு பிறகு வெளியான சாஹோ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளை விட ஹிந்தியில் வெற்றிபெற்றது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் கொரோனா பரவலால் படங்கள் வெளியீடு குறைந்தாலும் பிரபஸுக்கு மட்டும் தென்னந்திய கதாநாயகர்களில் படங்கள் அதிகமாக குவிந்து வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது. அந்ந வகையில் ராதே ஷ்யாம், ஆதி புருஷ் மற்றும் ஸ்பிரிட் போன்ற பெயரிடப்பட்ட படங்களும். பின்னர் இயக்குனர் சித்தார்த் ஆனந்ந், தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கும் வரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுபோக இன்னும் 4 படங்கள் அறிவிப்புக்கு காத்திருக்கின்றன, கொரோனா பரவல் குறைந்தவுடன் ஒவ்வோரு படமாக வெளிவரவுள்ளது.