கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ராஜமௌலியின் பான் இந்தியா படமான ஆர்.ஆர்.ஆர் படம் இந்திய அளவில் சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் முக்கிய திரைப்படமாகும். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியாபட் நடித்த இப்படம கடந்த பொங்கலுக்கு வெளியாக வேண்டியது. கொரோனா மூன்றாம் அலை காரணமாக இதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக படக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "நாங்கள் படத்தை மார்ச் 18ம் தேதி வெளியிடத் தயாராக இருக்கிறோம். இல்லையெனில் ஏப்ரல் 22ம் தேதி படம் வெளியாகும்" என ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளார்கள்.