தமிழில் தன் ஓ.டி.டி தளத்தை கொண்டுவரும் அல்லு அர்ஜுன்

Update: 2022-01-24 01:00 GMT

தமிழுக்கு புதிதாக வருகிறது நடிகர் அல்லு அர்ஜுனின் ஓ.டி.டி தளம்.




 


தமிழில் ஏற்கனவே அமசோன், நெட்ப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார், ஜி 5 என பல ஓ.டி.டி தளங்கள் உள்ளன. இதில் தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக திரையில் வெளிவராத படங்கள் வெளிவருகின்றன. குறைந்த செலவில் குடும்பத்துடன் விருப்பப்பட்ட நேரத்தில் வீட்டில் படம் பார்க்கலாம் என்ற சூழல் நிலவுவதால் ரசிகர்களிடையே ஓ.டி.டி தளங்களுக்கு பெரும் வரவேற்பு நிலவுகிறது.




 


இந்நிலையில் 'புஷ்பா' படத்தின் மூலம் இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் பிரபலமான அல்லு அர்ஜுனுக்கு சொந்தமாக தெலுங்கில் 'ஆஹா' என்ற பெயரில் ஓ.டி.டி தளம் இயங்கிவருகிறது. இதனை தற்பொழுது தமிழில் விரிவுபடுத்தவும் அல்லு அர்ஜுன் திட்டமிட்டுள்ளார். இதற்கான வேலைகளையும் துவங்கியுள்ளார். இனி அல்லு அர்ஜுன் ஓ.டி.டி தளமும் தமிழ் ரசிகர்களை கவரும்.

Similar News