இயக்குனர் வெற்றிமாறன் புதிதாக வெப்சீரிஸ் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவில் மூன்று முக்கிய விருது படங்களை கொடுத்த பெருமை இயக்குனர் வெற்றிமாறனை சேரும். ஆடுகளம், விசாரணை, அசுரன் என தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக நடிகர் தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகளை இப்படங்களின் மூலம் பெற்றுதந்துள்ளார்.
தற்பொழுது நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்தபடியாக நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களுக்கு அடுத்தபடியாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார் அது தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை இரண்டாம் பாகமா அல்லது வேறு கதைக்களமா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.