காவல்துறை விசாரணைக்காக மலையாள நடிகர் திலீப் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலையாக நடிகர் திலீப் சில வருடங்களுக்கு முன் நடிகை கடத்தல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையில் வெளிவந்தார். பின்னர் நடிகர் திலீப் மீது அதே வழக்கில் புதிய வழக்கு ஒன்றை காவல்துறையினர் பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை சனிக்கிழமை நீதிமன்றம் விசாரித்தது.
விசாரணையின் முடிவில் நீதிமன்றம் "வரும் மூன்று நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடிகர் திலீப் காவல்துறையினர் முன் ஆஜராக வேண்டும்" என உத்தரவிட்டது. மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் அது திலீப்'பிற்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் எழும் எனவும் தெரிவித்துள்ளது.