துப்பாக்கி சுடும் வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் குட்லக் சகி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு முன்னரே வரவேண்டிய கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான 'குட்லக் சகி' திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவான இப்படத்தை தில் ராஜு வெளியிடுகிறார். இதில் துப்பாக்கி சுடும் வீராங்கனை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இப்படம் ஜனவரி 28'ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.