இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் விக்ரமின் 'மகான்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
செவன் ஸ்கீரின் ஸ்டுயோஸ் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருங், வாணி போஜன், சிம்ரன் நடிப்பில் உருவான படம் 'மகான்'. விக்ரமுடன் அவரது மகன் துருவ் இணைந்து நடித்திருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக திரையரங்கில் வெளியாகாமல் இப்படம் அமேசான் ஓ.டி.டி தளத்தில் பிப்ரவரி 10'ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.