'அயலான்' படம் தாமதம் ஏன்? - எடிட்டர் ரூபன்

Update: 2022-01-25 12:30 GMT

அயலான் படத்தில் ஹாலிவுட் தரத்தில் கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால் படம் தாமதாக தயாராகிவருவதாக படத்தின் எடிட்டர் தெரிவித்துள்ளார்.




 


சிவகார்த்திகேயன் தற்பொழுது டான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனாலும் இதனுடன் அறிவிக்கப்பட்ட டாக்டர் படம் வெளிவந்துவிட்டது. ஆனால் இப்படம் வெளிவருவது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.




 


இதுகுறித்து இப்படத்தின் எடிட்டர் ரூபன் கூறுகையில், " அயலான் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். குறிப்பாக ஏலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் சிறப்பாக உலக தரத்தில் தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் ஒவ்வோரு காட்சியிலும் கிராபிக்ஸ் வேலைகள் நிறைய இருப்பதால் நிறையவே மெனக்கெடுகிறோம் அதனால் தான் படம் தயாராவதில் தாமதம்" என குறிப்பிட்டுள்ளார் எடிட்டர் ரூபன்.

Similar News