பத்து தல படத்திலும் தொடரும் சிம்பு'வின் 'மாநாடு' சென்டிமெண்ட்

Update: 2022-01-26 10:30 GMT

நடிகர் சிம்புவின் பத்து தல படத்திற்கும் மாநாடு படத்தின் எடிட்டர் பிரவீன் கே.எல் ஒப்பந்தமாகியுள்ளார்.




 


'மாநாடு' படம் சிம்புவின் சினிமா வாழ்வில் முக்கியமான படம். வரிசையாக இறங்குமுகத்தில் இருந்த நடிகர் சிம்புவின் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்ட படம் என்றால் அது மாநாடு மட்டுமே! இந்நிலையில் 'மாநாடு' படத்தின் வெற்றி சென்டிமெண்ட் சிம்புவின் அடுத்த படமாகிய பத்துதல வரைக்கும் நீண்டுள்ளது.




 


இயக்குனர் ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் எடிட்டராக பிரவீன்.கே.எல் ஒப்பந்தமாகியுள்ளார். 'மாநாடு' படத்தின் வெற்றியே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

Similar News