புனீத் ராஜ்குமாரின் இறுதி படமான 'ஜேம்ஸ்'ன் போஸ்டர் வெளியானது

Update: 2022-01-26 10:30 GMT

புனீத் ராஜ்குமாரின் கடைசிப்படமான 'ஜேம்ஸ்' படத்தின் முதல் பார்வை வெளியானது.




 


கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் ரசிகர்களால் 'பவர் ஸ்டார்' என செல்லமாக அழைக்கப்பட்டவர் யாரும் எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் காலமானர். தென்னிந்திய திரையுலகத்தை அதிர்ச்சியடைய வைத்த இந்த மரணம் ரசிகர்களை கண்ணீரால் மூழ்கடித்தது. இன்னமும் அவர் மறைந்துவிட்டார் என நம்பமுடியாத இழப்பாக புனீத் அவர்களின் இழப்பு இருந்து வருகிறது.




 


இந்நிலையில் அவரின் கடைசி படமான 'ஜேம்ஸ்' படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் வெளியாகும் மார்ச் 17'ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு வேறு படங்களை வெளியிட போவதில்லை என கன்னட திரையுலகம் கூட்டாக முடிவெடுத்துள்ளது.

Similar News