அஜித்தை தொடர்ந்து மலையாள நடிகர மோகன்லாலை தனது தயாரிப்பில் நடிக்க வைக்கிறார் தயாரிப்பாளர் போனிகபூர்.
தமிழில் நடிகர் அஜித் அவர்களை வைத்து நேர்கொண்ட பார்வை, 'வலிமை' படங்களை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் அடுத்தபடியாக மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத்தை வைத்து அஜித் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில் அஜித்திற்கு அடுத்தபடியாக யாரை வைத்து படம் இயக்கவிருக்கிறார் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் மலையாள நடிகர் மோகன்லாலை வைத்து படம் இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் மூன்று மொழிகளில வெளியாகும் என்றே தெரிகிறது.