மொழி மாற்றம் செய்து தமிழில் வெளியாகவிருக்கும் பாலகிருஷ்ணாவின் 'அகான்டா'
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றார் 'அகான்டா' திரைப்படம் தமிழிலும் ரீமேக் செய்து வெளியாக உள்ளது.
இயக்குனர் சீனு இயக்கத்தில் உருவான படம் அகான்டா, என்.டி.பாலகிருஷ்ணா நடித்த இந்தப் படம் ஆந்திராவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்பொழுது ஓ.டி.டி'யிலும் இப்படம் வெளியாகி அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. தமிழில் இந்த படம் வரவேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க இந்த படம் தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்து திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.
அடுத்த மாதம் இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. தமிழிலும் இப்படம் வர வேண்டும் என்பது பல ரசிகர்களின் விருப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.