'வீரமே வாகை சூடும்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சரவணன் இயக்கி விஷால் நடிப்பில் உருவான படம் வீரமே வாகை சூடும்'. இப்படத்தில் கார்த்தி, யோகிபாபு போன்றோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படம் கடந்த குடியரசு தினத்துக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் கட்டுப்பாடுகளுடன் இருந்ததல் படத்தை வெளியாகவில்லை.
இந்நிலையில் தமிழக அரசு கொரோனா ஊரடங்கு தளர்த்தி உள்ளதால் மீண்டும் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி 'வீரமே வாகை சூடும்' படம் தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.