செல்வராகவனுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா? ஆச்சரியத்தில் விஜய் ரசிகர்கள்!

Update: 2022-01-30 12:30 GMT

விஜய்யின் பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் அரசியல்வாதியாக நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளட்ட பல பிரபல நடிகர்கள் நடித்து வரும் படம் 'பீஸ்ட்'. இந்நிலையில் இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலை நெல்சன் ஏற்கனவே வெளியிட்டார்.


விஜய் படத்தில் செல்வராகவன் நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, இந்நிலையில் செல்வராகவன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்களிடையே இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Similar News