"உங்கள் ரசிகராகிவிட்டேன்" - புஷ்பா படம் பார்த்து நெகிழ்ந்த பாலிவுட் பிரபலம்!
புஷ்பா படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் ரசிகர் ஆகியுள்ளார் பிரபல நடிகர் அனுபம் கேர்.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இந்திய படமாக வெளியானது 'புஷ்பா'. அல்லு அர்ஜுன் நடிப்பில் 5 மொழிகளில் வெளியான படம் அனைத்து மொழிகளிலும் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கேர் புஷ்பாவை பார்த்து அல்லு அர்ஜுனை பாராட்டியது மட்டுமில்லாமல் அவருடன் நடிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல நடிகர் அனுபம் கேர் கூறியதாவது, "புஷ்பா பார்த்தேன் உண்மையான பிளாக்பஸ்டர் திரைப்படம், மிகச்சிறந்த படம். விரைவில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். ஒட்டுமொத்த படக்குழுவிற்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.