நடிகை வாணி போஜன் புதிய படமான 'கேசினோ' பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.
சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி பின்னர் "ஓ மை கடவுளே" படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை வாணி போஜன். தற்போது நடிகை வாணி போஜன் மற்றும் மதம்பட்டி ரங்கராஜ் இருவரும் இணைந்து திரில்லர் கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் இந்த திரைப்படத்திற்கு 'கேசினோ' என்று பெயரிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் மார்க் ஜோயல் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளும் முழுதாக முடிந்துள்ளது. இப்படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது திரையரங்கில் வெளியாகுமா அல்லது ஓ.டி.டி'யில் என்பது அடுத்த வாரத்தில் தெரியவரும்.