மீண்டும் இணையும் சிம்பு - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி

Update: 2022-02-01 01:00 GMT

'மாநாடு' படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரின் கூட்டணி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




 


இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடித்த இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றது இந்நிலையில் மீண்டும் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் ஒரு படம் உருவாகி வருகிறது.





மலையாளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் "ட்ரைவிங் லைசென்ஸ்" இந்த படத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் விஜய் சந்தர் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிகிறது.

Similar News