மீண்டும் காமெடி கதைக்களம் ரூட்டை பிடித்த சுந்தர்.சி

Update: 2022-02-01 12:45 GMT

கலகலப்பு திரைப்படத்தின் வெற்றி கூட்டணி சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் இணைய உள்ளது.




 


காமெடி கதைக்களத்தில் மிகவும் பெயர் பெற்ற இயக்குனர் சுந்தர்.சி இவரின் காமெடி திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எக்காலத்திலும் வரவேற்பு அதிகம், இந்நிலையில் தற்போது தனது பழைய கூட்டணியை வைத்து மீண்டும் ஒரு காமெடி படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் சுந்தர்.சி. இதில் நடிகர் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று பேர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.




 


நடிகை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவக்கவிழா நிகழ்வுடன் ஆரம்பித்துள்ளது விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதிகள் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளது தயாரிப்பு நிறுவனம்.

Similar News